Healthy Cooking
வெஜிடபிள் கலவைக் கூட்டு
தேவையானவை: பாசிப்பருப்பு - ஒரு கப், கேரட், சிறிய புடலங்காய், பச்சை மிளகாய் - தலா 1, பீன்ஸ் - 10, பச்சைப் பட்டாணி - 100 கிராம், தேங்காய் துருவல் - ஒரு கப், சீரகம் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கேரட்டை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கவும். புடலங்காய், பீன்ஸையும் தனித்தனியே சிறு துண்டுகளாக நறுக்கவும். கேரட், பீன்ஸ், புடலங்காய், பச்சைப் பட்டாணி ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு, உப்பு சேர்த்து வேகவிடவும். பச்சை மிளகாய், தேங்காய் துருவல், சீரகத்தை தண்ணீர் விட்டு அரைத்துச் சேர்க்கவும். பாசிப்பருப்பை வேக வைத்து கூட்டுடன் சேர்த்துக் கலந்து, தாளிக்கும் பொருட்களைத் தாளித்து சேர்த்து இறக்கவும்.
குறிப்பு: சூடான சாதத்தில் இந்தக் கூட்டை கலந்து சாப்பிடலாம் சைட் டிஷ் தேவை இல்லை.
மேத்தி ரொட்டி
தேவையானவை: கோதுமை மாவு - 200 கிராம், வெந்தயக்கீரை - ஒரு கட்டு, பால் - 100 மில்லி, உப்பு - தேவையான அளவு,குறிப்பு: பால் சேர்ப்பதால் எண்ணெய், நெய் எதுவும் வேண்டாம். இதற்கு ஆனியன் ரெய்தா சிறந்த காம்பினேஷன்.
நீர்க் கொழுக்கட்டை
தேவையானவை: புழுங்கல் அரிசி - கால் கிலோ, தேங்காய் துருவல் - ஒரு கப், உப்பு - தேவையான அளவு.குறிப்பு: தேங்காய் சேர்த்து அரைத்து இருப்பதால், சுவையாக இருக்கும். ஊறுகாய், இட்லி மிளகாய்ப்பொடி ஆகியவை இதற்கு சிறந்த காம்பினேஷன். சட்னியும் நன்றாக இருக்கும்.
வெஜிடபிள் குருமா
தேவையானவை: தக்காளி - ஒன்று, கேரட் - ஒன்று, பச்சைப் பட்டாணி - 100 கிராம், உருளைக்கிழங்கு - 2, கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், தனியாத்தூள் - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, தேங்காய் துருவல் - 4 டீஸ்பூன். உப்பு - தேவையான அளவு.குறிப்பு: கரம் மசாலா பிடிக்காதவர்கள்... புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை ஆகியவற்றைச் சிறிதளவு சேர்த்து அரைத்து கொதிக்கவிடலாம்.
எள் உருண்டை
தேவையானவை: கறுப்பு எள் - 100 கிராம், வெள்ளை எள் - 100 கிராம், வெல்லம் - கால் கிலோ, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.குறிப்பு: எள் எலும்பு வளர்ச்சிக்கு மிகவும் நல்லது. பருவ வயது வரும்போது எள்ளை பெண் குழந்தைகளுக்கு கொடுத்து அவர்களை வலுவடைய செய்யலாம். எள்ளை துவையல், பொடி என்று சமையலில் பலவிதமாக பயன்படுத்தலாம்.
புரோட்டீன் ரிச் உசிலி
தேவையானவை: முளைகட்டிய பயறு - ஒரு கப், முளைகட்டிய கொண்டைக்கடலை - ஒரு கப், முளைவிட்ட சோளம் - ஒரு கப், முளைகட்டிய கொள்ளு - ஒரு கப், பூண்டு - 2 பல்,காய்ந்த மிளகாய் - 2, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
குறிப்பு: சூடான சாதத்தில் சிறிதளவு நெய் அல்லது எண்ணெய் விட்டு இந்த உசிலி சேர்த்துச் சாப்பிடலாம்.
ராகி இனிப்பு உருண்டை
தேவையானவை: கேழ்வரகு மாவு - ஒரு கப், சர்க்கரை - ஒரு கப், வறுத்த முந்திரிப்பருப்பு - 10, ஏலக்காய்த்தூள் சிறிதளவு, நெய் - 4 டீஸ்பூன்.குறிப்பு: கேழ்வரகு மாவை கொதிக்கும் நீரில் சிறிது சிறிதாக போட்டுக் கிளறி... வெல்லம், தேங்காய் சேர்த்து உருட்டி, ஆவியில் வேக வைத்தும் கொடுக்கலாம்.
வெஜிடபிள் சொதி
தேவையானவை: கேரட் - 1, பீன்ஸ் - 10, குடமிளகாய் - ஒன்று, நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, தேங்காய்ப்பால் - 100 மில்லி, உப்பு - தேவையான அளவு.தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு - சிறிதளவு, தேங்காய் எண்ணெய் - அரை ஸ்பூன்.
குறிப்பு: இடியாப்பத்துக்கு சிறந்த காம்பினேஷனாக இருக்கும் இந்த ரெசிபி, இலங்கையில் வசிப்பவர்களின் ஸ்பெஷல் ரெசிபி.
பயறு கறி
தேவையானவை: சிவப்பு காராமணி - 200 கிராம், தேங்காய் துருவல் - ஒரு கப், காய்ந்த மிளகாய் - ஒன்று, தனியா - ஒரு டீஸ்பூன், கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.குறிப்பு: இது, குழல் புட்டுக்கு ஒரு சிறந்த காம்பினேஷன். சப்பாத்திக்கும் நன்றாக இருக்கும்.
வெஜிடபிள் இட்லி
தேவையானவை: இட்லி மாவு - அரை கிலோ, துருவிய கேரட் - ஒரு கப், பொடியாக நறுக்கிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், நறுக்கிய பச்சை மிளகாய் - ஒன்று, பொடியாக துருவிய கோஸ் - ஒரு கப், பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒரு கப்.குறிப்பு: இந்த மினி இட்லிக்கு வெங்காய சாம்பார் சிறந்த காம்பினேஷன். ஒரு பவுலில் சாம்பார் ஊற்றி, இட்லிகளை சற்று ஊறவைத்தும் சாப்பிடலாம்.
பைனாப்பிள் ரசம்
தேவையானவை: புளி - ஒரு நெல்லிக்காய் அளவு, பைனாப்பிள் துண்டுகள் - 6, சாம்பார் பொடி - ஒரு டீஸ்பூன், வேக வைத்த துவரம்பருப்பு - ஒரு கப், நறுக்கிய கொத்தமல்லி, பெருங்காயத்தூள் - சிறிதளவு, பச்சை மிளகாய் - ஒன்று, உப்பு - தேவையான அளவு.தாளிக்க: கடுகு - அரை ஸ்பூன், எண்ணெய் - ஒரு டீஸ்பூன்.
குறிப்பு: பைனாப்பிள் ஃப்ளேவருடன் வித்தியாசமான டேஸ்ட்டில் இருக்கும் இந்த ரசம்.
கத்திரிக்காய் கொத்ஸு
தேவையானவை: கத்திரிக்காய் (பெரியது) - ஒன்று, புளி - ஒரு நெல்லிக்காய் அளவு, தனியா. கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, வெல்லம் - ஒரு சிறு துண்டு, உப்பு - தேவையான அளவுகுறிப்பு: அரிசி உப்புமாவுக்கும், பொங்கலுக்கும் சிறந்த காம்பினேஷன் இது.
காராமணி சுண்டல்
தேவையானவை: சிவப்பு காராமணி - 200 கிராம், வெல்லம் - 100 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, தேங்காய் துருவல் - ஒரு கப்.குறிப்பு: வெல்லம் சேர்த்திருப்பதால், இந்த சுண்டல் இரும்புச் சத்து மிக்கது. நவராத்திரி கொண்டாட்டத்தில் இதற்கு தனி இடம் உண்டு.
மல்டி பருப்பு பொடி
தேவையானவை: கடலைப்பருப்பு - ஒரு கப், துவரம்பருப்பு - ஒரு கப், மிளகு - ஒரு டீஸ்பூன், பாசிப்பருப்பு - ஒரு கப், காய்ந்த மிளகாய் - ஒன்று, உப்பு - தேவையான அளவுகுறிப்பு: குழம்பு வைக்காத சமயங்களில் இந்தப் பொடி கைகொடுக்கும்.
மல்டி மாவு கேக்
தேவையானவை: கேழ்வரகு மாவு - ஒரு கப், கோதுமை மாவு - ஒரு கப், அரிசி மாவு - ஒரு கப், உப்பு தேவையான அளவு.செய்முறை: கேழ்வரகு மாவு, கோதுமை மாவு, அரிசி மாவு எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து... தண்ணீர், உப்பு சேர்த்துக் கரைத்து... அடுப்பில் வைத்து கூழ் பதம் வரும் வரை நன்கு கிளறவும். பிறகு, தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை தாளித்துக் கொட்டவும். கூழ் நன்கு ஆறியவுடன் விருப்பப்பட்ட வடிவத்தில் வெட்டி சாப்பிடலாம். இதை கூழாகவும் சாப்பிடலாம்.
குறிப்பு: விரத நாட்களில் இந்தக் கூழ் பசி தாங்கும். மோர் மிளகாய் தாளித்து சேர்க்கலாம்.
பாசிப்பயறு சுண்டல்
தேவையானவை: பாசிப்பயறு - 200 கிராம், தேங்காய் துருவல் - 4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 1, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன்.
குறிப்பு: இதே சுண்டலில் மாங்காய் துருவல், கேரட் துருவல் போட்டும் தயாரிக்கலாம்.
பால் அவல்
தேவையானவை: அவல் - 200 கிராம், வெல்லம் - 100 கிராம், பால் - 250 மில்லி, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, தேங்காய் துருவல் - 2 டேபிஸ்பூன்.குறிப்பு: விரதம் இருப்பவர்களுக்கு இந்த அவல் பசியை அடக்கிவிடும். இந்த அவலும் ஒரு பழமும் போதும்... ஒரு நாள் பசி தாங்கலாம்.
புதினா - சீரக ரைஸ்
தேவையானவை: பாசுமதி அரிசி - 250 கிராம், புதினா - ஒரு கட்டு, சீரகம் - 6 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒரு கப், பொட்டுக்கடலை - 4 டீஸ்பூன், வறுத்த வேர்க்கடலை - 4 டீஸ்பூன், நெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், சீரகம் - 6 டீஸ்பூன். எண்ணெய் - அரை டீஸ்பூன்
குறிப்பு: கலந்த சாத வகைகளில் இது வித்தியாசமானது. புதினா - சீரகம் தனி ருசி தரும். முந்திரி, பாதாம், பிஸ்தா வறுத்துப் போட்டால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
காரப்பொரி
தேவையானவை: அரிசிப்பொரி - மீடியம் சைஸ் பாக்கெட், வறுத்த வேர்க்கடலை - 100 கிராம், பொட்டுக்கடலை - 100 கிராம், பூண்டுப் பல் - 2, மிளகாய்த்தூள் - முக்கால் டீஸ்பூன், பெருங்காய்த்தூள் - சிறிதளவு. தாளிக்க கடுகு - சிறிதளவு, கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - 1 டீஸ்பூன்.குறிப்பு: மாலை வேளையிலும் மழைக் காலத்திலும் சாப்பிட இந்தக் காரப்பொரி மிகவும் உகந்தது.
வெஜிடபிள் ஸ்பெகட்டி
தேவையானவை: ஸ்பெகட்டி (சேமியாவில் ஒருவகை) - 100 கிராம் , குடமிளகாய் - ஒன்று, கேரட் - ஒன்று, பச்சை மிளகாய் - ஒன்று, கொத்தமல்லி - சிறிதளவு தக்காளி, வெங்காயம் - தலா ஒன்று, பச்சைப் பட்டாணி - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.குறிப்பு: ஸ்பெகட்டி டிபார்ட்மென்டல் ஸ்டோர்களில் கிடைக்கும். குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸில் கொடுக்க புதுமையானது. கலர் குடமிளகாய் சேர்த்தால் பார்க்கவும் அழகு!
Comments