Eggplant Yogurt Vada

Eggplant Yogurt Vada

கத்திரி தயிர்வடை
தேவையானவை: கத்திரிக்காய் - 100 கிராம், கடலைப்பருப்பு - 150 கிராம், முளைகட்டிய பாசிப்பயறு - 50 கிராம், பச்சை மிளகாய் - 6, கெட்டித்தயிர் - 50 கிராம், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, என்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கடலைப்பருப்பையும், பாசிப்பயறையும் அரைமணி நேரம் ஊறவைத்து, மிக்ஸியில் கரகரப்பாக அரைக்கவும். கத்திரிக்காயை நன்கு கழுவி, துண்டுகளாக நறுக்கி, பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து... அதனை பருப்பு விழுதுடன் சேர்க்கவும். பிறகு, அந்த மாவுக் கலவையில் பெருங்காயத்தூள், உப்பு, தயிர் சேர்த்து பிசிறி... வடையாகத் தட்டி, சூடான எண்ணெயில் இட்டு பொரித்து எடுக்கவும்.

கத்திரிக்காயை அரைக்காமல் பொடிப்பொடியாக நறுக்கி சேர்த்தால், மாவு கெட்டியாக இருக்கும்; வடையும் மொறுமொறுப்பாக வரும்.

Comments