Fruit Varieties
மாம்பழ மில்க் ஷேக்
தேவையானவை: மாம்பழம் - 2, பால் - 500 மி.லி, சர்க்கரை - 150 கிராம்.குறிப்பு: மாம்பழம் சூடு என்று சிலர் மாம்பழம் பக்கமே போக மாட்டார்கள். பால் சேர்த்து பருகும்போது, சூடும் தாக்காது; உடம்புக்கும் நல்லது.
தர்பூசணி தோசை
தேவையானவை: தர்பூசணி - அரை கிலோ, புழுங்கல் அரிசி - கால் கிலோ, உளுத்தம்பருப்பு - 150 கிராம், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.குறிப்பு: அரிசி, உளுந்துடன் தர்பூசணியை சேர்த்து அரைத்தால் தண்ணீர் சேர்க்க தேவை இல்லை. இந்த தோசை சற்று வித்தியாசமான சுவையுடன் இருக்கும்.
பழ வடை
தேவையானவை: கடலைப்பருப்பு, துவரம்பருப்பு - 100 கிராம், பச்சை ஆப்பிள், பேரிக்காய் - தலா 1, மிளகு - 6 (எண்ணிக்கையில்), இஞ்சி - ஒரு சிறு துண்டு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், தீயை மிதமாய் வைத்து, வடைகளாகத் தட்டி எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
குறிப்பு: சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு பச்சை ஆப்பிள் மிகவும் நல்லது. இதற்கு சாஸ் அல்லது சட்னி சூப்பர் சைட்-டிஷ்!
ஆப்பிள் பர்பி
தேவையானவை: ஆப்பிள் - 1, சர்க்கரை - 150 கிராம், தேங்காய் - அரை மூடி, ரவை - 4 டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன்.குறிப்பு: தேங்காய் பர்பியை விட, பழங்களில் செய்யும் இதுபோன்ற பர்பி நல்ல டேஸ்டாக இருக்கும்.
வெரைட்டி ஃப்ரூட் இட்லி
தேவையானவை: மாம்பழம் - 1, புழுங்கல் அரிசி - 250 கிராம், உளுத்தம் பருப்பு - 100 கிராம், ஆப்பிள், பேரிக்காய், கொய்யாப்பழம், பைனாப்பிள் - தலா 4 துண்டுகள், உப்பு - ஒரு சிட்டிகை.குறிப்பு: அப்படியே சாப்பிடலாம். ட்ரை ஃப்ரூட்ஸ் சேர்த்தும் செய்யலாம். மாம்பழத்திற்கு பதிலாக பப்பாளி சேர்த்தும் இதே முறையில் இட்லி தயாரிக்கலாம்.
பப்பாளி அப்பம்
தேவையானவை: அரிசி மாவு, கோதுமை மாவு, பொடித்த வெல்லம் - தலா 150 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, பப்பாளிப் பழத் துண்டுகள் - 100 கிராம், நெய் - 100 மி.லி, தேங்காய் - அரை மூடி.குறிப்பு: பப்பாளிப்பழம் கண் பார்வைக்கு மிகவும் நல்லது. கடாயிலும் எண்ணெய் விட்டு மாவை ஊற்றி ஊத்தப்பமாகவும் செய்யலாம்.
வெரைட்டி ஃப்ரூட் சுகியன்
தேவையானவை: பைனாப்பிள் துண்டுகள் - 100 கிராம், ஸ்ட்ராபெர்ரி - 4, மாம்பழம், வாழைப்பழம் - தலா 2 துண்டுகள், உளுத்தம்பருப்பு, பொன்னிறமாக வறுத்த பாசிப்பருப்பு, பொடித்த வெல்லம் - தலா 100 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, எண்ணெய் - 200 மி.லி.குறிப்பு: தீயை மிதமாக வைத்துதான் பொரிக்கவேண்டும். சூடாக சாப்பிட சுவையாக இருக்கும் இந்த சுகியன்.
ஸ்ட்ராபெர்ரி ஜாம்
தேவையானவை: ஸ்ட்ராபெர்ரி - 20, பேரீச்சம்பழம் - 6, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, உப்பு - தேவையான அளவு, வெல்லம் - ஒரு சிறு துண்டு, எண்ணெய் - 2 ஸ்பூன்.குறிப்பு: பிரெட், சப்பாத்திக்கு சிறந்த காம்பினேஷன். ஆப்பிள், பைனாப்பிள் பழத்திலும் இதேபோல் தயாரிக்கலாம்.
வாழைப்பழ அல்வா
தேவையானவை: வாழைப்பழம் - 6, சர்க்கரை - 150 கிராம், வறுத்த முந்திரிப்பருப்பு - 10, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, நெய் - 100 மி.லி, கேசரிப்பவுடர் - ஒரு சிட்டிகை.குறிப்பு: விசேஷ நாட்களில் வாழைப்பழம் மீந்து விட்டால், இந்த அல்வா செய்து ஃப்ரிட்ஜில் ஒரு வாரம் வரை வைத்திருந்து சாப்பிடலாம்.
மில்க் ஃப்ரூட் தூத்பேடா
தேவையானவை: பால் - ஒரு லிட்டர், சர்க்கரை, நறுக்கிய சப்போட்டா, நறுக்கிய ஆப்பிள் - தலா 100 கிராம், வாழைப்பழத் துண்டுகள் - 4, பாதாம் பருப்பு, முந்திரிப்பருப்பு - தலா 10, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.குறிப்பு: இந்த தூத்பேடா மிகவும் ருசியாக இருக்கும். கோவா தயாரிக்காமல் ஜாமூன் மிக்ஸ் பயன்படுத்தியும் செய்யலாம்.
வாழைப்பழ கேசரி
தேவையானவை: ரவை - 250 கிராம், வாழைப்பழம் - 4, பால் - 500 மி.லி, சர்க்கரை - 200 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, நெய் - 100 மி.லி, வறுத்த முந்திரிப்பருப்பு - 10.
குறிப்பு: சத்யநா ராயணா பூஜையின் போது வாழைப்பழ கேசரி செய்து நைவேத் தியம் செய்வார்கள். கேசரிப்பவுடர் சேர்க்கத் தேவையில்லை.
மாம்பழ மோர்க்குழம்பு
தேவையானவை: மாம்பழம் - 1, மோர் - 500 மி.லி, காய்ந்த மிளகாய் - 2, கடுகு - அரை டீஸ்பூன், வெந்தயம் - ஒரு டீஸ்பூன், தேங்காய் - அரை மூடி, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.குறிப்பு: மாம்பழ சீசனில் இந்த மோர்க்குழம்பு செய்யலாம். காய்ந்த மிளகாய்க்குப் பதிலாக மிளகு சேர்த்தும் செய்யலாம். பொரித்த பப்படம், இதற்கு சூப்பராக இருக்கும்.
ஃப்ரூட்ஸ் பால் கொழுக்கட்டை
தேவையானவை: தேங்காய் - அரை மூடி, அரிசி - 200 கிராம் (ஊற வைக்கவும்), பால் - 500 மி.லி, பொடித்த வெல்லம் - 100 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, பொடியாக நறுக்கிய ஆப்பிள், மாதுளை முத்துக்கள், பொடியாக நறுக்கிய சப்போட்டா - சிறிதளவு.
குறிப்பு: வாழைப்பழம், பலாப்பழத்திலும் இந்த கொழுக்கட்டை செய்யலாம்.
பலாப்பழ பாயசம்
தேவையானவை: பலாச்சுளை - 10, பொடித்த வெல்லம் - 100 கிராம், நெய் - 2 டீஸ்பூன், நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பு - 10, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, தேங்காய்ப்பால் - 200 மி.லி.குறிப்பு: படு ருசியாக இருக்கும் இந்த பலாப்பழ பாயசம்... கேரள மக்கள் விரும்பி சாப்பிடும் ரெசிபி!
ஃப்ரூட் பொங்கல்
தேவையானவை: அரிசி - கால் கிலோ, வாழைப்பழம், சாத்துக்குடி, பைனாப்பிள் துண்டு, சப்போட்டா - தலா 1, நெய் - 100 மி.லி, கல்கண்டு - ஒரு டேபிள்ஸ்பூன், பால் - 500 மி.லி, முந்திரிப்பருப்பு - 10.
குறிப்பு: ஒரே ஒரு பழத்திலும் இதேபோல் செய்யலாம். நெய்யில் ட்ரை ஃப்ரூட்ஸ் வறுத்தும் சேர்க்கலாம்
மல்டி ஃப்ரூட் லஸ்ஸி
தேவையானவை: திராட்சை - 10 எண்ணிக்கை, சப்போட்டா, மாம்பழம், சிறிய வாழைப்பழம் - தலா 1, சாத்துக்குடி ஜூஸ் - 200 மி.லி, சர்க்கரை - 50 கிராம், அதிகம் புளிக்காத தயிர் - 500 மி.லி.குறிப்பு: தயிரில் சர்க்கரை மட்டும் சேர்த்து லஸ்ஸி குடிப்பதை விட இந்த ஃப்ரூட் லஸ்ஸி உடலுக்கு மிகவும் எனர்ஜியைத் தரும். ஃப்ரிட்ஜில் வைத்தும் பருகலாம்.
ஆப்பிள் அடை
தேவையானவை: புழுங்கல் அரிசி - 250 கிராம், பாசிப்பருப்பு - 150 கிராம், ஆப்பிள் - 2 (பொடியாக நறுக்கவும்), எண்ணெய், உப்பு - தேவையான அளவு.குறிப்பு: காரம் இல்லாமல் பழ வாசனையுடன் மிகவும் ருசியாக இருக்கும் இந்த அடை. பிடித்தமான பழங்களை வைத்து இதே முறையில் அடை தயாரிக்கலாம்.
ஃப்ரூட் சப்பாத்தி
தேவையானவை: கோதுமை மாவு - 250 கிராம், வெண்ணெய் - 4 டீஸ்பூன், மாம்பழத் துண்டு, சப்போட்டா துண்டுகள் - தலா 6, பைனாப்பிள் துண்டுகள் - ஒரு டேபிள்ஸ்பூன், நெய் - 100 மி.லி.குறிப்பு: இதற்கு சைட்-டிஷ் தேவை இல்லை. புளிப்பும், தித்திப்புமாய் அருமையாக இருக்கும்.
ஃப்ரூட் சூப்
தேவையானவை: ஆப்பிள், சாத்துக்குடி - தலா 1, நறுக்கிய தர்பூசணி, நறுக்கிய கிர்ணிப்பழம், விதையில்லாத திராட்சை - தலா 100 கிராம், மிளகுத்தூள் - கால் டீஸ்பூன், சர்க்கரை - 4 டீஸ்பூன்.குறிப்பு: சூப்பை 'ஜில்’லென்றும் குடிக்கலாம்.
கிவி சட்னி
தேவையானவை: கிவிப் பழம் - 2, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, கடுகு - அரை டீஸ்பூன், புளிக்காத தயிர் - 100 கிராம், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
குறிப்பு: கிவிப் பழம் லேசாக புளிப்பு சுவையுடன் இருக்கும். தேவைப்பட்டால் சுவைக்காக அரை டீஸ்பூன் சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம். பஜ்ஜி, வடைக்கு ஏற்ற சிறந்த காம்பினேஷன்.
சாபுதானா ஃப்ரூட் உப்புமா
தேவையானவை: ஜவ்வரிசி - 200 கிராம், வறுத்த வேர்க்கடலை, பொடியாக நறுக்கிய ஆப்பிள், மாதுளை முத்து, பொடியாக நறுக்கிய பைனாப்பிள் - தலா 100 கிராம், வறுத்த முந்திரிப்பருப்பு, உலர்ந்த திராட்சை - தலா 10, உப்பு - தேவையான அளவு, நெய் - 100 மி.லி.குறிப்பு: இந்த உப்புமா நார்த் இண்டியன் ஸ்பெஷல். பழம் சேர்த்து செய்வதால் ஒரு தனி டேஸ்ட்.
Comments