Green Halwa

Green Halwa 

க்ரீன் அல்வா
தேவையானவை: துருவிய சுரைக்காய் - கால் கப், துருவிய சௌசௌ - கால் கப், துருவிய புடலங்காய் - கால் கப், நெய் - 4 டீஸ்பூன், பால் பவுடர் - 2 டீஸ்பூன், பால் - அரை கப், சர்க்கரை - அரை கப்.
அலங்கரிக்க: வறுத்த முந்திரி, திராட்சை - சிறிதளவு.

செய்முறை: கடாயில்  பாதியளவு நெய் விட்டு துருவிய காய்களை பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும். பிறகு, பாலை அதில் விட்டு மிதமான தீயில் வேக விடவும். வெந்ததும், சர்க்கரையைச் சேர்த்துக் கிளறவும். எல்லாம் ஒன்றாகக் கலந்து சுருண்டு வரும் சமயத்தில்... மீதியுள்ள நெய், பால் பவுடர் சேர்த்து நன்கு கிளறி அல்வா பதம் வந்ததும் இறக்கி, வறுத்த முந்திரி, திராட்சை வைத்து அலங்கரித்து பரிமாறவும்.

க்ரீன் அல்வா: சுண்டக் காய்ச்சிய பாலைப் பயன்படுத்தினால் சுவை அதிகமாகும். அதேபோல் பால் பவுடர் இல்லாவிட்டால், 'கோகோ’ பவுடர் பயன்படுத்தியும் அல்வா செய்யலாம்.

Comments